தஞ்சாவூர், நவ.5 (டிஎன்எஸ்)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரியிலும் தொடர் மழை காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நேற்று மாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று மட்டும் (நவம்வர் 5) விடுமுறை அளிக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)