சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்றும் கடலோரப் பகுதியிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி ராமேஸ்வரத்தில் 8 செ.மீ மழையும், நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை, தரங்கம்பாடியில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஒரு செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)