இலங்கை மீனவர்கள் மேலு‌ம் 9 பேர் ‌சிறை‌யி‌ல் அடை‌ப்பு

 

செ‌ன்னை,  நவ.5 (டிஎன்எஸ்)

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 9 பேரை கடலோர காவ‌ல்படை‌யின‌ர் கைது செ‌ய்து படகுக‌ள், மீன்களை ப‌றிமுத‌ல் செ‌‌ய்து காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் ஒ‌ப்படை‌த்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌யி‌ல் கடலோர பாதுகாப்பு படை‌யி‌ன‌ர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினத்தில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் 2 படகுகளில் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்தது தெரியவந்தது.

உடனே அங்கு விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் 2 படகுகளில் இருந்த 9 மீனவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 9 பேரும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜர்படுத்தப்பட்டு ‌சிறை‌யி‌ல் அடைக்கப்பட்டனர்.

(டிஎன்எஸ்)

Nov 05, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MITHUNA MITHUNA : Today be conservative in your planning process. But be dynamic and encourag...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
03:18 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.