ஆரூர் புதியவன்
சிரித்துக்கொண்டே வந்து
சில்லறை கேட்கிறாய்
வைத்துக்கொண்டே கேட்பது
கெட்ட பழக்கம் இல்லையா?
******************************
ஆனாலும்
இவ்வளவு
ஆடம்பரம் கூடாது..
குளித்துவிட்டு
முத்துகளை
உதிர்த்துக்கொண்டே
நடந்துபோகிறாய்!
******************************
நினைத்ததெல்லாம்
நடந்துவிடுகிறதா என்று கேட்டாய்.
உன்னை நினைப்பது மட்டும்
நடந்துவிடுகிறது.
******************************
என்னதான் கவிதை சொன்னாலும்
பதில் சொல்வதில்லை
நீயும்
ரோஜாப் பூவும்.
******************************
க..ச..ட..த..ப..ற
வல்லினம்..
அதையே
நீ சொன்னால்
மெல்லினம்
******************************
Oct 26, 2009
* Do not use semicolon(;)