வேறொரு நாளில் வேறோர் இடத்தில்

 வேறொரு நாளில் வேறோர் இடத்தில்

- செந்தில்நாதன், பெங்களூரு
 
உடல்கள் உறுப்புகளாகக்
கிடைக்கும் அதிசயங்கள்
நிகழப் போகின்றன..!

குருதி பெருகி வடிந்து
பச்சை பசும் புல் தரை
செவ்வரத்தம் பூக்கள் போலாகப் போகின்றது.

மலக் குழிக்குள் பதுங்கியிருக்கும் ஈக்கள்
இரட்டைச் சிறகு முளைத்துப் பறந்து
மொய்க்கப் போகின்றன.
 
இன்னும்
மல்லிகை மணம் கசியும் காற்று
பிணநெடி சுமந்து வீசப் போகின்றது.

அழும் குரல்கள் கணப் பொழுதில்
ஓய்ந்துவிடப் போகின்றன.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாக
காவல் துறை அறிவிக்கும்.

அவசர உதவி ஊர்திகள்
அலறிச் செல்லும்.

அன்னிய சக்திகளின் சதி என்று
உள்துறை அமைச்சர் சொல்லுவார்.

அமைதியைக் கெடுக்கச் சதி
என்று முதல்வர் அறிக்கை விடுவார்.

ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் பொழுதும்
இவற்றைத் தவிர பெரிதாக
என்ன நிகழ்ந்துவிடப் போகிறது..?

வேறொரு நாளில்
வேறோர் இடத்தில்
குண்டு வெடிக்கும்
என்பதைத் தவிர.

========================
ஓவியம்: 'டிஜிட்டல்' சீனிவாசன்

Sep 10, 2009

Worth a Click

Comments


v
nice starting keep it up
24 Sep 2009 07:23 PM

kalithas
@nirmalaa shrethar poem wrote by senthilnathan..its mentioned tob of the poem...
12 Sep 2009 11:30 AM

nirmalaa shrethar
who wrote this..no name...good one
11 Sep 2009 12:32 PM

kalithas
குயிலின் இசையும், மயிலின் அழகும் மறந்துபோக... குருதியின் அசைவும், மரணத்தின் குரலும் மனசில் மரண வலியை...??? என்ன செய்ய தாக்கும் தீவிரவாதமும் தாங்கும் நெஞ்சமும் இங்கே பலருக்கு உண்டு நாம் உட்பட....! செந்தில் ரொம்ப அர்த்தம் உள்ள கவிதை... தொடர்ந்து எதிர்பார்க்கும் ரசிகன் காளிதாஸ்
10 Sep 2009 07:20 PM




Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MESHA MESHA : Today as a family head take charge and control of situations before others ...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
10:21 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.