பேரா. ஹாஜா கனி
கல்வி
வணிகமான பிறகு
லாபம் சேர்ந்தது
முதலாளிகளுக்கு...
நஷ்டம் வந்தது
அறிவாளிகளுக்கு...
பிள்ளைகள்
ஐந்திலேயே வளைகிறார்கள்
புத்தக மூட்டை சுமப்பதால்.
ஆனால்,
ஐம்பதிலும் ஏனோ
நிமிர முடியவில்லை.
பயன்பாடு புரியாமல்
பயில்கின்ற கல்வியால்
படித்தவர்களின் எண்ணிக்கை
கூடியது.
அறிஞர்களின் எண்ணிக்கையோ
குறைந்தது.
கல்வி
வேலை வாய்ப்பிற்கான கருவி என்ற
ஒற்றைப் பரிமாணப் பார்வையில்
தேவை
உடனடி மாற்றம்.
உணவு
உடை
இருப்பிடம்
கல்வி
என
அடிப்படைத் தேவைகளின் எண்ணிக்கை
நான்காக மாறட்டும்.
இன்றைய சமூகம்
ஒரு போர்க்களம்.
அதில் அறிவுதான்
நமது ஆயுதம்.
(ஹாஜா கனியின் 'துப்பாக்கிகளுக்கு பதிலாக...' என்ற நூலிலிருந்து. பக்கம்: 112; விலை: ரூ.40; கிடைக்குமிடம்: எதிரொலி பதிப்பகம், ப.எண்: 201, புதிய எண்: 66, புனித மேரி சாலை, முதல் தளம், அபிராமபுரம், சென்னை - 600018)
Sep 04, 2009
* Do not use semicolon(;)