நிர்மலா ஸ்ரீதர்
வானம் பார்த்து நடக்க ஆசை...
பூமி பார்த்துச் சுழல ஆசை...
வெளிச்சத்தோடு பேச ஆசை....
இருட்டை நுகர ஆசை..
நடு நிசியில் கடற்கரை ஓரம்
நடனம் ஆட ஆசை...
அதிகாலையில்
மரங்களை வெறித்துப்
பார்க்க ஆசை...
யாரையும் சட்டை
செய்யாமல் நடைபாதையில்
குந்தி உட்கார ஆசை..
வாண்டுகளுடன் கோலி
விளையாட ஆசை..
என் மகளுடன்
மழையில் நனைய ஆசை...
ஆண் நண்பனுடன்
அச்சமில்லாமல்
கை கோத்து
ஊர் சுற்ற ஆசை ...
பொது இடத்தில்
என் காதலனுக்கு,
தோன்றும் போதெல்லாம்
முத்தம் கொடுக்க ஆசை....
Oct 24, 2009
* Do not use semicolon(;)