நிர்மலா ஸ்ரீதர்
விடியல் எனக்கு
பாரமாய் இருந்தது..
தட்டிக் கொண்டு வரும்
வெளிச்சத்தை
தூக்கம் முட்டிக்கொண்டு
விரட்டியது...
சோம்பல், இரவை
இன்னும் கொஞ்சம்
நீட்டியது....
இவற்றையெல்லாம்
தோற்கடித்து
ஒரு நாள்
ஒரு குயிலின் ஓசை
அதிகாலையில் எனை
எழுப்பியது...
தினம் தினம் குயிலோசை
என் விடியலை
விசேஷமாக்கியது...
அன்று குயிலோசை
கேட்கவில்லை..
சாலை விரிவுபடுத்த
மரங்கள் வெட்டப்பட்டிருந்தன..
எங்கே சென்றதோ என் குயில்..
எனக்கு விடியல்
மீண்டும் பாரமானது............!
Jul 31, 2009
* Do not use semicolon(;)