திரைப்பட இயக்குநர் தருண்கோபிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண், ஜானு லிங்கேஸ்வரிக்கும் தருண்கோபிக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.
'திமிரு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் தருண்கோபி. பிறகு சிம்புவை வைத்து 'காளை' என்ற படத்தை இயக்கினார்.
இயக்குநராக இருந்த தருண்கோபி, 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதில் வெற்றியும் பெற்றார். தற்போது 'ஜீவா பூங்கா', 'என்னை ஏதோ செய்துவிட்டாய்', 'காட்டுப்பய' ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
தருண்கோபிக்கும் மதுரையைச் சேர்ந்த இலங்கை தமிழ்ப் பெண் ஜானு லிங்கேஸ்வரிக்கும் திடீரென திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஜானு லிங்கேஸ்வரி, கணினிப் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர்களின் திருமணம், 2010, ஜனவரி 15 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற உள்ளது.
Nov 03, 2009
* Do not use semicolon(;)