தலைப்பைப் படித்தவுடன் ஷாருக்கான் சந்திர மண்டலத்திற்குச் செல்லப் போகிறாரோ என்று நினைக்கத் தூண்டும். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் சந்திர மண்டலத்திற்கு ஷாருக்கான் செல்ல வாய்ப்பு உள்ளது.
எதிர்காலத்தில் சந்திர மண்டலத்தில் மனிதர்களைக் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக இப்போதே சந்திரனில் பலர் இடம் வாங்கி வருகிறார்கள். அதில் ஒருவராக நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்திருக்கிறார்.
ஆனால் அவர் பேரில் நிலத்தை வாங்கியது ஷாருக்கான் இல்லை; அவரின் ரசிகர் ஒருவர். ஆஸ்திரேலியாவில் உள்ள லூனார் ரிபப்ளிக் சொசைட்டி, இந்தி நடிகர் ஷாருக்கான் பெயரில் இடம் பத்திரப் பதிவு செய்து உள்ளது. அங்கு வசிக்கும் ஷாருக்கான் ரசிகர் ஒருவர் லூனார் ரிபப்ளிக் சொசைட்டியில் பல லட்சம் செலவில் இந்த இடத்தைப் பத்திரப் பதிவு செய்துள்ளார். அந்தப் பத்திரத்தை ஷாருக்கானுக்குப் பிறந்த நாள் பரிசாக அனுப்பி வைத்துள்ளார். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சந்திரனில் ஒரு இடத்தைப் பதிவு செய்து பத்திரத்தை அந்த ரசிகர் ஷாருக்கானுக்கு அனுப்பி வைக்கிறாராம்.
அந்த இடத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஷாருக்கானிடம் நிருபர்கள் கேட்டபோது, "எதிர்காலத்தில் எல்லோரும் அங்கு குடியேற வாய்ப்பு வந்தால் அப்போது அது பற்றி யோசிப்பேன்'' என்றார்.
Nov 05, 2009
* Do not use semicolon(;)