தற்போது அதிரடி திரைப்படங்கள் வெளியாகிவரும் நேரத்தில் காந்தியத்தை மையமாக வைத்து உருவாகிறது 'காந்திக் கணக்கு' திரைப்படம். இன்று நம் நாட்டு மக்களிடையே அவரவர் தகுதிக்கேற்ப ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் பரபரப்பு பிரச்சினை ஒன்றைக் கதைக் களமாக வைத்து, அந்தப் பிரச்சினையில் சிக்கிய ஒருவன், எப்படி காந்திய வழியில் மீள்கிறான் என்பதைச் சொல்லும் படம்தான் 'காந்திக் கணக்கு'.
இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சம்பத் ஆறுமுகம். இவர் இயக்குநர் சசியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். 'பூஜா பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரமணா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக முன்னணி நடிகை ஒருவரும், புது முகம் ஒருவரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி, நடந்து வருகிறது. சென்னையைத் தொடர்ந்து கோவை, ஊட்டி, கோவா, கேரளா ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமுட்டுள்ளனர். மேலும் இங்கிலாந்து வீதிகளில் சிறப்பு அனுமதி பெற்று, பாடல் காட்சி ஒன்றைப் படமாக்க இருக்கிறார்கள்.
Nov 05, 2009
* Do not use semicolon(;)