'சித்து - ( பிளஸ் டூ ஃபஸ்ட் அட்டம்ட் )' - இசை வெளியீட்டு விழா

 'சித்து - ( பிளஸ் டூ ஃபஸ்ட் அட்டம்ட் )' - இசை வெளியீட்டு விழா

இயக்குநர் கே.பாக்யராஜ் தம் மகன் சாந்தனுவை வைத்து இயக்கும் படம் 'சித்து - ( பிளஸ் டூ ஃபஸ்ட் அட்டம்ட்)'. இப்படத்தை கே.பாக்யராஜூடன் மோசர் பியர் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, 2009, அக்டோபர் 31ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது.

படத்தின் குறுந்தகட்டைத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், முன்னிலையில் நடிகர் விஜய் வெளியிட, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெற்றுக்கொண்டார். இவர்களுடன் திரைப் பிரமுகர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கே.பாக்யாராஜ் தம் மகனை வைத்துப் படம் இயக்கிய தன் அனுபவத்தை நகைச்சுவையாகப் பத்திர்கையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

"நான் அமிதாப்பச்சனையே வச்சு படம் எடுத்திட்டேன். ஆனால், என் மகனை வைத்துப் படம் எடுக்கறதுக்குள்ளே ஒரு வழியாகிட்டேன். அனைத்து விஷயங்களிலும் தலையிடுகிறான். இசை, ஒளிப்பதிவு, வசனம் அனைத்திலும் தனது யோசனையைச் சொல்லி நான் நினைத்தது போல எடுக்க முடியாமல் செய்துட்டான்" என்றார் கே.பாக்யராஜ். மேலும், "சொந்த புள்ளைய வச்சு படம் எடுக்கறது ரொம்ப கஷ்டம்ப்பா என்று சொல்ல", "இப்போது இருக்கும் தலைமுறைகளுக்கு எது பிடிக்கும் என்று எனக்குத்தானே தெரியும்? அதைத்தான் நான் சொன்னேன். நான் சொன்ன விசயங்களைப் படம் பிடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்களே ரசிக்கும் போது படம் பார்க்கும் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்களா ?" என்று சாந்தனு கேள்வி எழுப்புகிறார்.

மேலும் "தம் தந்தையுடன் இணைந்து பணியாற்றியது தனக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது என்று கூறிய சாந்தனு, அப்பா என்பதால்தான் நான் தலையிட்டேன். இதுவே வேறு இயக்குநராக இருந்தால் அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்திருப்பேன்" என்றார்.

Nov 02, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MESHA MESHA : As an entrepreneur want to achieve something good today? Then consolidate y...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
03:51 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.