அகவை 55இல் அடியெடுத்து வைக்கும் உலக நாயகன்

 அகவை 55இல் அடியெடுத்து வைக்கும் உலக நாயகன்

இந்திய திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு 2009, நவம்பர் 7 அன்று 55ஆவது பிறந்த நாள்.

1954ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகமான கமல்ஹாசன், 1960ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதில் இருந்து தனது நடிப்புத் திறமையால் தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி இந்திய ரசிகர்களையும் கவர்ந்த நடிகராக விளங்குகிறார். 55ஆம் வயதில் அடியெடுத்து வைக்கும் கமல்ஹாசனுக்கு இந்த ஆண்டு திரையுலகின் பொன்விழா ஆண்டு.

திரையுலகில் சம்பாதித்த பணத்தைத் திரைப்படங்களிலே முதலீடு செய்யும் ஒரு கலைஞனாக திகழும் கமல்ஹாசன், நவீன தொழில்நுட்பங்களைத் தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

கமல்ஹாசன் தன் நற்பணி இயக்கங்களின் மூலம் தன் பிறந்த நாளன்று நடத்தப்படும் இரத்த தானம், உடல்தானம் போன்றவற்றில் கலந்துகொண்டு பிறந்த நாளைக் கொண்டாடக் கூடியவர்.

ஒவ்வொரு படத்திலும் தன் திறமையை வெவ்வேறு வடிவில் வெளிப்படுத்துவது மட்டும் அல்லாமல், திறமைசாலிகள் பலரையும் கண்டு அவர்களின் திறமைகளை வெளி உலகிற்குக் கொண்டு வருவதிலும் பெரும் சிரத்தை எடுத்துக்கொள்பவர்.

திரைப்படங்கள் மட்டுமின்றி, இலக்கியம், கவிதை போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்ட கமல்ஹாசன், எப்பொழுதும் தன்னை ஒரு மாணவனாகவே நினைத்துப் புதுப் புது விசயங்களை திரைத் துறையில் அறிமுகப்படுத்த ஆர்வம் உள்ளவர் என்றால் அது மிகையாகாது.

வியாபார நோக்கத்துடன் வெளியாகி வரும் படங்களின் இடையே தனது பொன்விழா ஆண்டில் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்ட திரைப்படமான 'உன்னைப் போல் ஒருவன்' என்ற  படத்தைக் கொடுத்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, நடிகர் கமல்ஹாசனை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் பல புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு புதிய படைப்புகளைப் படைக்கத் தயாராக இருக்கும் இந்தக் கலைஞனுக்குச் சென்னைஆன்லைன்.காம் நேயர்கள் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துகள்.

கமலுக்கு உங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்க:

 

Nov 07, 2009

Worth a Click

Comments


ds. sudha
my dear kamal hasan, happy birth day; wish you all the best and long live.
11 Nov 2009 03:52 AM

nasa
all hail kamal தமிழ் சினிமாவின் புரட்சி அவதாரம் நீ! உனக்கு சினிமா மட்டுமல்ல அரசியலும் தெரியும்! ஆனால் சினிமாவை மட்டுமே நீ நேசிப்பவன்! ஆன்மீகத்தை ஜீரணித்து சமூகத்தை நேசிப்பவனே ! நீ பல்லாண்டு வாழ்க!
09 Nov 2009 05:27 PM

GUBENDRAN S
LONG LIVE PADMASHRI DR.KAMAL
08 Nov 2009 04:24 PM

thirumurthy
மேலும் பல புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு புதிய படைப்புகளைப் படைக்கத் தயாராக இருக்கும் இந்தக் கலைஞனுக்குச் சென்னைஆன்லைன்.காம் நேயர்கள் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துகள்.
07 Nov 2009 06:57 PM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

THULA THULA : A busy day where you would be meeting influential people and having discuss...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:24 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.