தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ரெடி' என்ற படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கப் போவது பழைய செய்தி என்றாலும். அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகும் நடிகையைப் பற்றிய செய்திதான், இது.
தமிழில் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில் தனுஷூடன் ஜோடி போட இருப்பவர், நடிகை ஜெனிலியா, 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ்ப் படங்களின் நாயகியானவர். இவர், தற்போது தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பதுடன் இந்திப் பட உலகிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
இவர் தமிழில் நடிப்பது கேள்விக்குறியாக இருந்தது. எனினும் தனுஷ் படத்திற்காகக் கோடிகளைக் கொடுத்து அழைத்து வந்திருக்கிறது, பாலாஜி ஸ்டூடியோஸ் பிரைவேட் லிட். இந்த நிறுவனம், இந்தியில் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. மேலும் 'சந்திரமுகி', 'கில்லி', 'சிவாஜி' போன்ற படங்களைப் போல் பல கோடி செலவில், படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறது.
தற்போது தனுஷ் நடிக்கும் 'குட்டி' படத்தை இயக்கி வரும் மித்ரன் கே.ஜவஹர், இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி' என்ற படத்தை இயக்கியவர். இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக தனுஷ் உடன் இணைகிறார் மித்ரன் கே.ஜவஹர்.
இதன் மூலம் ஒரே ஹீரோவை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்கு இவர் உரியவர் ஆகிறார்.
Nov 07, 2009
* Do not use semicolon(;)