மதுபானக்கடை

 மதுபானக்கடை

சென்னை, ஆக.03 (டிஎன்எஸ்)இந்த படத்திற்கு தமிழக அரசு சிறப்பு மாநியம் கொடுத்தாலும் கொடுக்கலாம், அந்த அளவுக்கு மது குடிப்பவர்கள் பற்றியும், மதுவைப் பற்றியும் ரொம்ப நல்லாவே ஆராய்ந்திருக்கிறார்கள். படத்தில் கதை என்ற ஒன்றே இல்லை. (அதை இயக்குநர் முதலிலே சொல்லிவிடுகிறார்).

டாஸ்மாக் மதுப்பானக் கடைகளில் காலை 10மணிக்கு முன்பாகவே வரும் குடிமகன்களையும், இரவு 10மணிக்குப் பிறகும் அங்கேயே இருக்கும் குடிமகன்களை பற்றியும் சொல்லும் படம் தான் 'மதுபானக்கடை'.

பிச்சை எடுத்தாவது குடித்துவிட வேண்டும் என்று இருப்பவர்கள், காட்டை விற்று குடித்தவன், வீட்டை விற்று குடித்தவன், செய்யும் வேலைக்காக குடுப்பவர்கள், என்று குடிப்பவர்களில் எத்தனை வகையானவர்கள் இருக்கிறார்கள் என்றும் இயக்குநர் சொல்லியிருக்கிறார். இதற்கிடையில் பாரில் வேலை செய்யும் இளைஞர் ஒருவருக்கும், பார் முதலாளியின் பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் எபிசோட் ஒன்றை டைடானிக் ரெஞ்சில் இயக்குநர் நகர்த்தி செல்கிறார். (பாரில் வேலை செய்தாலும், ஹீரோவுக்கு மட்டும் குடி பழக்கம் இல்லையாம். இங்கேயும் ஹீரோ இமேஜை என்னமா மெய்ன்ட்டையின் பன்றாங்க...)

புதுமுக இயக்குநர் கமலகண்ணன் இயக்கியிருக்கும் மதுபானக்கடை படத்தில் கதை இல்லையென்றாலும், அதில் நடித்தவர்களிடம் நடிப்பை நன்றாகவே வாங்கியிருக்கிறார். படத்தில் இடம்பெற்ற அத்தனை முகங்களும் இதுவரை திரையில் பார்த்திராத முகங்களாக இருந்தாலும் அவர்களுடைய நடிப்பு ரொம்பவே எதார்த்தமாக அமைந்திருக்கிறது. இதற்காகவே இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

சில இடங்களில் படம் சலிப்படைய செய்தாலும், பல இடங்கலில் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது. அதிலும் படத்தின் இறுதிக்காட்சியாக இடம்பெறும், சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியின் காட்சி போதையில் தள்ளாடிய முழு படத்திற்கும், லெமன் ஜூஸ் கொடுத்து தெளிவடையவைக்கிறது.

தமிழ்ப் படங்களில் அவ்வப்போது இடம்பெறும் ஒரு சில மது குடிக்கும் காட்சிகளைப் பார்த்தாலே படம் பார்க்கும் நமது குடிமகன்கள் "ஞாபகப்படுத்திட்டாங்களே.." என்று கூறி டாஸ்மாக் நோக்கி சென்று கொண்டிருக்க, முழுப்படமே அதைப்பற்றி தான் என்றால்!

ஜெ.சுகுமார் (டிஎன்எஸ்)

Aug 06, 2012

Comments

ஒரு மது பானக்கடையின் நிகழ்வுகளை சமூக உணர்வுடன் - இயல்பாக யதார்த்தமாக - நகைச்சுவையுடன் காட்டியிருக்கும் மிகச் சிறந்த தமிழ்த் திரைப்படம் "மது பானக் கடை". ஒரு சிறந்த - இயல்பான சிறு கதை போன்ற படம். இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல் கல். ஆண்களின் மதுப் பழக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படும் பெண்கள் இப்படத்தை பார்க்க வேண்டும் - பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆண் - பெண் இரு பாலாரும் பார்க்கும் வகையில் இந்தப் படத்தை இயக்குனர் கமலக் கண்ணன் சிறப்பாகவே இயக்கியுள்ளார்.
Posted by iniyan on 10 Aug 2012 12:52 AM
Security Code

 
* Do not use semicolon(;)
மேலும் திரை விமர்சனம்

POLL OF THE DAY

Building Collapse in Porur
All builders are looked at with suspicion. Agree?

           

QUICK LINKS

CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

Panchangam
24-Nov-2014
8th Day Of Month Of Kaarthigai
  • Nalla Neram :6:15-7:15 | 4:45-5:45
  • Rahukalam: 7:30am-9:00am
  • Yamakandam: 10:30am-12:00pm
  • Kuligai: 1:30pm-3:00pm

POLL OF THE DAY

Building Collapse in Porur
All builders are looked at with suspicion. Agree?

           

© Copyright 2014,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.