அமராவதி படத்தின் முலம் அஜீத்தை அறிமுகப்படுத்தியவர் சிவசக்தி பாண்டியன். காதல் கோட்டை என்ற மிகப் பெரிய ஹிட் படத்தை தயாரித்தவர் என்றாலும், அதன் பின் அவர் தயாரித்த சில படங்கள் தோல்வி அடைந்ததால் அமைதியாக இருந்துவிட்டார். சுமார் ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் படம் தயாரிக்க வந்திருக்கிறார் பாண்டியன். ஆச்சரியம் என்னவென்றால், இப்படத்தின் கதையை இவரே எழுதியிருக்கிறார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் என்பதாலும், கடும் சிக்கலுக்குள்ளான படங்கள் பலவற்றை தனது முயற்சியால் வெளிக் கொண்டுவந்தவர் என்பதாலும், திரையுலகமே திரண்டு இவருக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறது. படத்தின் நாயகனாக கஜினி என்பவரை அறிமுகப்படுத்துகிறார். படத்தின் பெயர் சூரியன் சட்டக் கல்லூரி!
சட்டக் கல்லூரியைக் கெட்ட கல்லூரியாகவே காட்டிவரும் ஊடகங்கள், இந்தப் படத்தைப் பார்த்தால் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு ரொம்ப நல்லவர்களாகக் காட்டப் போகிறார்களாம் மாணவர்களை.