ஐயய்யோ வந்திட்டாரே என்றும், ஆஹா வந்திட்டாரு என்றும் இரு வேறு எதிர்வினைகளைக் காட்டுகிறார்கள் நாயகன் படத்தின் நாயகன் ஜே.கே. ரித்தீஷைக் கண்டால். ஆனால் மனிதர் செய்திருக்கும் ஒரு காரியம் உண்மையிலேயே அற்புதம்!
இராம நாராயணனிடம் இணை இயக்குனராக சுமார் 25 படங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய ஒருவர், தஞ்சை வீதிகளில் மனநோயாளியாகத் திரிந்துகொண்டிருக்கிறார். ஆச்சரியம் என்வென்றால் இவரே ஒரு படத்தை இயக்கியிருக்கிறாராம். முன்னணி வார இதழில் வந்த இந்தக் கட்டுரையைப் படித்த ரித்தீஷ், மேற்படி இயக்குனரின் மருத்துவச் செலவுக்கு ஐம்பாதாயிரம் கொடுத்து உதவியிருக்கிறார். கூலி வேலைக்கு போய் அதில் கிடைக்கும் வருமானத்தில் கணவருக்குச் சோறு போடும் அவரது மனைவி, ரித்தீஷின் இந்த உதவியைப் பெற்றுக்கொண்டதுடன், யாருண்ணே தெரியலையே மவராசன் என்று வாழ்த்தினாராம்.
திரையுலக ஜாம்பவான்கள் பலரும் இதை ஒரு செய்தியாகப் படித்துவிட்டு ஒதுங்கிவிட்ட நிலையில், தானே முன்வந்து இந்தக் காரியத்தைச் செய்திருக்கும் இவர், நிஜமாகவே நாயகன்தான்!