சத்யராஜுக்கும், ரஜினிக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம். அதுதான் உண்ணாவிரதப் பந்தலில் கொஞ்சம் சூடாக எதிரொலித்தது. சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க முதலில் சத்யராஜைத்தான் அழைத்தார்களாம். சரி, ஆனா ஒரு கண்டிஷன். அவரு படத்திலே நான் வில்லனா நடிக்கிறேன். என் அடுத்த படத்திலே அவரு வில்லனா நடிப்பாரா என்று சத்யராஜ் கேட்க, இடத்தைக் காலி செய்தார்கள் அப்போது.
அதே ரிப்பீட் இப்போதும் நடந்திருக்கிறது. இந்த முறை சிக்கியவர் கமல். இவர் சார்பாக வேறொரு முக்கியஸ்தர் வந்து மர்மயோகியில் வில்லனாக நடிக்கிறீர்களா, சம்பளம் ஒரு பொருட்டே அல்ல என்றாராம் சத்யராஜிடம். அவரிடம், சிவாஜிக்கு சொன்ன அதே பதிலை சத்யராஜ் சொல்ல, அவரும் சந்தடியில்லாமல் இடத்தைக் காலி செய்தாராம்.
|