மதுரை சம்பவம் என்ற படத்தில் நடிக்கிறார் 'கருவாப்பையா' ஹரிக்குமார். (இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அடைமொழி? இதை பீட் பண்ணுற மாதிரி இன்னொரு பாடலை கொடுங்க வாத்தியாரே) ஒன்றிரண்டு படங்களில் நடித்தாலும், அதில் தூத்துக்குடி செம ஹிட் என்பதால், மறுபடியும் இவரைத் தேடி வாய்ப்புகள்.
இப்போது மதுரை சம்பவம் என்ற ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். மேட்டர் அதுவல்ல இப்போது. படத்தில் இவருக்கு ஜோடியாக கருவாப்பையா கார்த்திகாவும், சிவா மனசுல சக்தி பட ஹீரோயின் அனுயாவும் நடிக்கிறார்கள். பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்ட ஸ்டில்களில் ஹரிக்குமாருடன் இந்த இருவரும் இல்லாமல் வேறொரு பெண் துப்பாக்கியுடன் நிற்க, அதிர்ந்து போனார்களாம் மேற்படி இரு ஹீரோயின்களும்.
எங்க படத்தையல்லவா முதலில் கொடுத்திருக்கணும்? என்று சண்டை பிடிக்க, "அந்த படத்தை போட வேண்டாம். வேற படம் கொடுக்கிறோம். அப்புறம் நியூஸ் போட்டா போதும்" என்று பத்திரிகையாளர்களுக்கு போன் போடுகிறார்கள் படக் குழுவினர்.
* Do not use semicolon(;)