சரண்-அஜீத் இணைகிறார்கள். சிவாஜி புரடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தின் பெயர் அசல். இப்படியெல்லாம் செய்திகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. ஆனால், அஜீத்திடமிருந்து முன்னணி ஆங்கில நாளிதழின் நிருபருக்கு வந்த எஸ்எம்எஸ்தான் இப்போது பெரும் குழப்பத்தை விளைத்திருக்கிறது.
அப்படி என்னதான் மெசேஜ் அனுப்பியிருக்கிறார் தல? நானும், சரணும் இணைவதாக வருகிற செய்திகளில் பாதிதான் உண்மை. ஆரம்ப நிலையில்தான் இருக்கிறோம். எனவே முறைப்படி பிரஸ் ரிலீஸ் வந்ததும் செய்தியை எழுதுங்கள். இப்போது உங்கள் காதுக்கு வந்திருக்கும் செய்தியில் கடைசி நேர மாற்றமும் இருக்கலாம். இதுதான் அந்த நிருபருக்கு அஜீத்திடம் இருந்து வந்து செய்தி.
என்னதான் நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள நேரில் போன நிருபரிடம், அஜீத் சொன்னது இதுதான். அஜீத் படத்தை இயக்குகிறேன் என்று சொல்லியே இந்நேரம் எங்காவது கடன் வாங்கியிருப்பார் சரண். அதனால்தான் எல்லாம் பேசி முடித்துவிட்ட பின் எழுதுங்கள் என்றேன்!
* Do not use semicolon(;)