"என் வீட்டிலே அவங்க எறிஞ்ச கல்லை எடுத்து பத்திரமாக வைச்சுருக்கேன். அதைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு வெறி வருது. அவரு எங்க நின்னாலும் விடமாட்டேன். வருகிற பாராளுமன்றத் தேர்தலில், விஜயகாந்த் கட்சிக்கு எதிராக சுற்றுப் பயணம் செய்து மக்களிடம் அவருக்கு ஓட்டுப் போடாதீங்கன்னு சொல்லுவேன். இப்போ கூட தினம் நாலு மிரட்டல் போன் வருது. ஆனால் நான் அதைப் பெரிசுபடுத்தலை. எம்.எல்.ஏ தேர்தலில் விஜயகாந்த்தை எதிர்த்து நிற்கிறதிலே மாற்றமே இல்லை" என்கிறார் வடிவேலு.
தனிக்கட்சி ஆரம்பிக்கிற ஐடியா இருக்கா? மற்ற கட்சிகள் சப்போர்ட் உங்களுக்கு இருக்கா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு வடிவேலு சொன்ன பதில், "பொறுத்திருந்து பாருங்கள்" என்பதுதான். மனிதர் என்னவோ பெரிய திட்டத்தில் இருக்கிறார் போலிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, வெளியூர்ப் படப்பிடிப்புக்குப் போகும் வடிவேலுவுக்கு துணையாகவும், அவருக்குப் பாதுகாப்பு கொடுக்கவும் ஒரு போலீஸ் பட்டாளமே தேவைப்படுகிறதாம். வெளியூர் ஷூட்டிங் பட்ஜெட்டில் இதுவும் ஒரு அடிஷனல் செலவாக ஏறிக்கொள்கிறது.
சவால் விடுறது ஒருத்தர். சந்தியில் நிக்கிறது இன்னொருத்தரா என்று வேதனைப்படுகிறார்கள் அவரை வைத்துப் படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள்.
* Do not use semicolon(;)