மும்பை பயங்கரவாதத்திற்கு எதிராகச் சென்னையில் நடந்த மாணவர்கள் பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்திருக்கிறார்கள் த்ரிஷாவும், ஸ்ரீகாந்தும். ஆனால் இந்தப் பேரணிக்கு வருவதற்குள் த்ரிஷா பட்ட அவஸ்தை அவருக்கு மட்டுமல்ல, கேட்கிற நமக்கும் பகீர்.
இவர் நடித்து வந்த கிங் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்புவதற்காக பாங்காக் விமான நிலையத்திற்கு வந்த த்ரிஷாவுக்கு அதிர்ச்சி. விமான நிலையமே பூட்டப்பட்டிருந்தது. அந்நாட்டில் நடைபெறும் அரசியல் குழப்பங்களால் ஏற்பட்ட விளைவு இது. வேறு வழியில்லாம புக்கட் தீவுக்குச் சென்று அங்கிருந்து கோலாலம்பூர் வழியாகச் சென்னைக்கு வந்தாராம்.
பயங்கரவாதத்திற்கு எதிராகக் கொடி பிடித்த த்ரிஷாவே பயங்கரவாதச் சூழலில் மாட்டிக்கொண்டிருந்திருப்பார் போலிருக்கிறதே!
* Do not use semicolon(;)