விஜய் ஆன்ட்டனி சொந்தமாக ஒரு ஆடியோ கம்பெனி துவங்கியிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வந்துவிடும் போலிருக்கிறது. தனது கம்பெனியின் சார்பில் இவர் முதன் முதலாக வாங்கியிருக்கும் படம் த.நா.4777. பசுபதி, மீனாட்சி நடித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. இதே விழாவில் தனது கம்பெனியின் பெயரை அறிவிப்பாராம் விஜய் ஆன்டனி.
வேடிக்கை என்னவென்றால், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜி.வி பிலிம்சுக்கு பெரும் பாரம் குறைந்திருக்கிறது. பொதுவாக இசை வெளியீட்டு விழா என்றால் விழாவை எங்கு வைப்பது? யாரை விருந்தாளியாக அழைப்பது என்ற குழப்பம் எல்லாம் இருக்கும். ஆனால், எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன். வேடிக்கையை மட்டும் பாருங்கள் என்று கூறிவிட்டாராம் விஜய் ஆன்டனி.
இவரது அழைப்பின் பேரில் விஜயே வந்தாலும் வருவார் என்கிறார்கள் இப்போதே!
* Do not use semicolon(;)