அந்தோ பரிதாபம்... பூ படத்தில் பார்வதி மேனனின் நடிப்பை ஆஹா ஓஹோ என்று ஊர் உலகமே பாராட்டிக்கொண்டிருக்கிறது. தியேட்டரை விட்டு வெளியே வருபவர்கள் எல்லாம் இந்தப் பொண்ணுக்கு அவார்டு நிச்சயம் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அவார்டு கிடைக்க வாய்ப்பில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். காரணம்?
படத்தில் பார்வதி டப்பிங் பேசவில்லையாம். சசியின் வற்புறுத்தலுக்காக முதல் இரண்டு ரீல் டப்பிங் பேசினாராம் பார்வதி. அதில் மலையாள நெடி அதிகம் அடித்ததால், படத்தின் ஜீவனே பாழாகிவிடும் என்று முடிவெடுத்த சசி, மகா என்ற டப்பிங் கலைஞியைப் பேச வைத்தாராம். அவரும் பார்வதியின் நடிப்புக்குப் பெருமை சேர்க்கிற மாதிரி பேசி அசத்தியிருக்கிறார்.
சொந்தக் குரலில் பேசியிருந்தால் மட்டுமே தேசிய விருது என்பது விதி. இப்போது கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள் சசியும் பார்வதியும். ஆனால் ஃபிலிம்ஃபேர் விருது முதலானவற்றுக்கு இதுபோன்ற விதி எதுவும் கிடையாது என்பதால் பார்வதி ஆறுதல் அடையலாம்.
* Do not use semicolon(;)