பொதுவாகவே கவர்ச்சி அதிகமுள்ள படங்களையோ, அல்லது ஆக்ஷன் அதிகம் உள்ள படங்களையோதான் தமிழில் டப்பிங் செய்வார்கள். இதுதாண்டா போலீஸ் ராஜசேகரின் படங்கள் மாதிரி அல்லது, ஸ்ரேயா, நயன்தாராக்களின் கவர்ச்சிப் படங்களைப் போஸ்டராக்கி தியேட்டருக்குள் ரசிகர்களை இழுப்பார்கள். லேட்டஸ்டாக சார்மி நடித்த படம் கூட ஏகப்பட்ட கவர்ச்சி அம்சங்களுடன் ரிலீசுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது.
ஆனால் கதையை மட்டுமல்ல, சினேகாவின் சிரிப்பையும் நம்பி ஒரு படத்தைத் தமிழ்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திராவில் செம ஹிட்டான தொலிவளப்பு என்ற படத்தைத் தமிழில் ஹரி என்ற பெயரில் ரிலீஸ் செய்யப் போகிறார்கள். ஜெயம் படத்தில் ரவி-சதா ஜோடிகளை க்ளைமாக்சில் விரட்டுவாரே கோபி, அவர்தான் இந்தப் படத்தின் ஹீரோ. சினேகாவுக்கு இந்தப் படத்தில் மிகவும் கனமான பாத்திரமாம்.
சினேகாவின் சிரிப்புக்கு கல்லா நிரம்புமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
* Do not use semicolon(;)