|
சனி
பகவான் இந்தப் பெயர்ச்சி மூலம் நன்மைகள் பல தரும் 3ஆம் இடத்தில் அமர்கிறார். இது
வரை இருந்த பண இறுக்கம், மன இறுக்கம் இரண்டும் குறைந்து விடுவதால், பணியில்
இருப்பவர்கள் புதிய தெம்புடன் திகழ்வார்கள். மாணவர்களின் பேச்சில் உள்ள தெளிவு,
பிறரின் மதிப்பையும் நட்பையும் சம்பாதித்துத் தரும். எவ்வளவு நெருக்கடியான
சூழலிலும், புன்னகையையே பதிலாகத் தருவதுடன், மன உறுதியுடனும் செயல்படும்
தைரியத்தைப் பெண்கள் பெறுவார்கள். வியாபாரிகள் புதிய யுக்தி மற்றும் சக்தியோடு
எதிரிகளை முறியடிப்பீர்கள். கலைஞர்களின் சிந்தனை வளத்தால், புதிய ஒப்பந்தங்கள் கை
வசமாகும். வருபவற்றைத் தக்க வைத்துக்கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. |