|
சுய
தொழில் புரிபவர்களின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கக் கூடிய வாரம் இது.
பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் வாய்ப்பு உள்ளதால், எதிலும்
எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் தெளிவான முடிவு எடுத்து உயர்
அதிகரிகளின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். பெண்களுக்குக் கடினமான முயற்சிக்குப்
பின் சில காரியங்கள் பலிதமாகும். எனவே வாக்குறுதிகளைக் கொடுக்கும் முன் யோசனை
செய்யுங்கள். கலைஞர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் அவர்களின் தகுதிக்கான
பரிசாய் இருக்கும். மாணவர்கள் வீண் புரளிகளை நம்பிச் செயல்பட வேண்டாம்.
|