|
மாணவர்கள்
தங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முயல்பவர்களின் சகவாசத்தைத் தவிர்த்தால்,
நல்ல நிலையை அடையலாம். பொறுப்பில் இருப்பவர்கள் எந்த இடத்திலும் பணிவாகப் பேசுவது
நல்லது. கலைஞர்கள் எந்தச் சூழலிலும், உறுதியான மனத்துடன் செயல்பட்டு வந்தால்,
எல்லாம் நலமாகவே முடியும். பெண்கள் வீண் விரயத்திற்கு வழி கோலும் செலவுகளைச்
சுருக்கிக்கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு என்பது இராது. கர்ப்பிணிப் பெண்கள் தங்கள்
உடல்நலத்தைக் கவனிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டிய வாரமிது. சுய தொழில்
புரிபவர்கள் எதிலும் அகலக் கால் வைக்காதிருப்பது நல்லது.
|