|
அவ்வப்போது
சிறிது ஆரோக்கிய நலிவு ஏற்பட்டாலும், பெண்கள் நினைத்த காரியத்தை முடித்து
மகிழ்வார்கள். கலைஞர்கள் எதிலும் அளவாக இருந்தால், வெளி வட்டார தொடர்பு லாபகரமாக
இருக்கும். வியாபாரிகள் மேற்கொள்ளும் பிரயாணங்களில் சற்று கவனமாய் இருத்தல் நலம்.
வீண் செலவைக் குறைத்தால், பெண்கள் வேண்டிய காரியங்களுக்குப் பணம் ஒதுக்கலாம்.
ஆர்வத்துடன் பாடம் பயிலும் மனோபாவம், மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற உதவியாய்த்
திகழும். மேலும் வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை
இதமாகச் சுட்டிக் காட்டினால், தவறுகளை அவர்களே திருத்திக் கொள்வார்கள். |