|
கலைஞர்கள்
திறமையுடன் செயல்பட்டு வந்தால், திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். பெண்கள் அண்டை
அயலாரிடம், அளவாகப் பழகி வந்தால், அநாவசியத் தொந்தரவுகள் அருகே வாராது. வியாபாரிகள்
வாகனங்களுக்கு உரிய காப்பீடு முதலியவைகளை உரிய கெடுவுக்குள் செலுத்திவிட்டால்,
தண்டம் கட்ட வேண்டியதிலிருந்து தப்பிவிடலாம். பெண்கள் மின்சாதனப் பொருட்களைக்
கவனமாகக் கையாளுங்கள். உயர்பதவியில் இருப்போர்கள் அதிக மரியாதை காண்பிப்பவர்களிடம்
கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் மனதுக்குப் பிடித்த மாற்றங்களைச் செய்யச்
சிறிது காலம் காத்திருக்கும் நிலை நிலவும். |