தமிழகச் செய்திகள்

மத்திய அமைச்சரவையில் 10 தமிழர்கள்
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தற்போதைய நிலவரப்படி 78 அமைச்சர்கள் இடம் பெறுகிறார்கள். இவர்களுள் 10 பேர் தமிழர்கள் ஆவர். இவர்களுள் 7 பேர் திமுகவையும் 3 பேர் காங்கிரசையும் சேர்ந்தவர்களாவர். மேலும்

உயர்நீதிமன்றத்தில் தேமுதிக வழக்கு
தமிழ்நாட்டில் இனி நடக்க இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று தேமுதிக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும்

ப.சிதம்பரம் அமைச்சர் பொறுப்பேற்றார்
இந்தியாவின் உள்துறை அமைச்சராக பழனியப்பன் சிதம்பரம் (ப.சிதம்பரம்) மே 25 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும்

பிரபாகரன் மரணம்: சென்னையில் அரசு பஸ் எரிப்பு
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடந்தது. சென்னையில் அரசு பேருந்து பெட்ரோல் குண்டுவீசி எரிக்கப்பட்டது. சென்னை உட்பட தமிழகத்தில் கடலூர், சேலம் என பல ஊர்களில் 22 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும்

தொண்டர் உயிரிழப்பு: ஜெயலலிதா கண்டனம்
அதிராம்பட்டினத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் மோதலில் உயிரிழந்தது தொடர்பாக கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்

"பீனிக்ஸ் பறவை போல பா.ம.க. எழும்"
"இந்தத் தற்காலிக தோல்வியைக் கண்டு பா.ம.க.வினர் சோர்ந்துவிட மாட்டார்கள். நாளைய வெற்றிக்கு இதைப் படிக் கட்டுகளாக எடுத்துக்கொண்டு 'பீனிக்ஸ்' பறவையைப் போல பா.ம.க. அரசியலில் மீண்டும் எழும்" என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும்

வெற்றியை விட இழப்பே சிறந்தது: விஜயகாந்த்
"பழி பாவங்களைச் செய்து பெற்ற வெற்றியை விட, பழிச் சொல்லுக்கு இடமில்லாமல் சான்றோர் பெற்ற இழப்பே சிறந்தது என்ற வள்ளுவர் வாக்கு நினைவுகூரத்தக்கது" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும்

மு.க.அழகிரி பேட்டி
மதுரை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மு.க. அழகிரி நேற்று இரவு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் மு.க.அழகிரிக்கு தாரை தப்பட்டையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும்

மக்கள் தந்த அங்கீகாரம் - தங்கபாலு அறிக்கை
மக்களவை தேர்தலில் வெற்றியை தேடித்தந்த தமிழக மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு நன்றி தெரிவித்துள்ளார். மேலும்

கூடை அள்ளிய ஓட்டுகள்
விழுப்புரம் மக்களவை தொகுதியில் கூடை சின்னத்தி போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் குமார் 14,770 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும்

All India Party Positions

Results Declared : 543

Party Won
UPA  0  262
NDA  0  160
Third Front  0  79
Fourth Front  0  28
Others  0  14

உங்கள் வாக்கு

நித்தியானந்தா..!
நித்தியானந்தா - தொலைக்காட்சிகள், பத்திரிகைகளின் செயல்பாடு சரியா?


உங்கள் பொங்கல் நினைவுகள்

சொன்னார்கள்

"இந்தத் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன. அதற்கு நன்றி. மக்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை."

- சோனியா காந்தி.
© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.