மக்களவை: 2 தமிழ் நடிகர்கள் வெற்றி

சென்னை, மே 17 (டிஎன்எஸ்)

2009 மக்களவைத் தேர்தலில் தமிழ் நடிகர்கள் இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர். நெப்போலியன், ரித்தீஷ் ஆகிய இந்த நடிகர்கள் இருவருமே திமுகவைச் சேர்ந்தவர்கள்.

நடிகர் து. நெப்போலியன் பெரம்பலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.கே.பாலசுப்பிரமணியனை 77,604 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இன்னொரு நடிகரான ஜே.கே. ரித்தீஷ், ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வ.சத்தியமூர்த்தியை 69,915 வாக்குகள் வித்தியாசத்திலும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான க.திருநாவுக்கரசரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்கடித்தார்.

நெப்போலியன், 1998இல் கலைமாமணி விருது பெற்றார். 2008இல் முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருதினைப் பெற்றார். வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் 2001இல் வென்ற இவர், 2006இல் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆயினும் சக நடிகர் எஸ்.வி. சேகரிடம் தோற்றார். அண்மையில் வட்டாரம், போக்கிரி, தசாவதாரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ரித்தீஷ், கானல் நீர் என்ற படத்தில் முதலில் நடித்தார். இந்தப் படம் வெற்றியடையாத போதும் அடுத்து, நாயகன் என்ற படத்தில் நடித்துப் பிரபலம் ஆனார்.

நெப்போலியன், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர்; ரித்தீஷ், தமிழக அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

(டிஎன்எஸ்)

May 17, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தேர்தல் திருவிழா செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
Party Positions - TN

Results Declared : 40

Party Won
DMK +  0  28
AIADMK+  0  12
DMDK  0  0
BJP+  0  0
Others  0  0

Click here for individual party positions

Worth a Click

Daily Predictions

MITHUNA MITHUNA : Today keep up your word in money matters. If you promise something stick on...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

All India Party Positions

Results Declared : 543

Party Won
UPA  0  262
NDA  0  160
Third Front  0  79
Fourth Front  0  28
Others  0  14

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

சொன்னார்கள்

"இந்தத் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன. அதற்கு நன்றி. மக்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை."

- சோனியா காந்தி.
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.