சென்னை, மே 13 (டிஎன்எஸ்)
தேர்தலில் ஆண்களின் ஆதிக்கம் தான் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிக்கு 823 பேர் போட்டியிட்டாலும் களத்தில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கையோ 47 தான். இவர்கள் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். வாக்குப் பதிவு மே 13 அன்று நடைபெறுகிறது.
மாநில மற்றும் தேசிய கட்சிகள் சார்பாக 22 பெண்கள் போட்டியிடுகிறார்கள். எஞ்சியவர்கள் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆவர். பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களாக மூன்று பேர் களத்தில் உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தலா இரண்டு பெண்களும், காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஒருவரும் போட்டியிடுகிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சி ஐந்து மகளிரையும், லோக் ஜன் சக்தி மூன்று பெண் வேட்பாளர்களையும் களத்தில் நிறுத்தியுள்ளன.
அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நடைபெறும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 28 பேர் போட்டியிட்டாலும் ஒரு மகளிர் கூட களத்தில் இல்லை.
(டிஎன்எஸ்)
May 13, 2009
* Do not use semicolon(;)