புது தில்லி, மே 25 (டிஎன்எஸ்)
ஏ. கே. அந்தோணி பாதுகாப்பு அமைச்சராக மே 25 அன்று புது தில்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின் பேசிய அவர், இந்தியாவைச் சுற்றியுள்ள பாதுகாப்புச் சூழல் நாளுக்கு நாள் சவால் நிறைந்ததாகி வருகிறது. "நம்மைச் சுற்றி ஏற்படும் நிகழ்வுகள் மிகுந்த கவலை ஏற்படுத்துகின்றன. ஆகவே எந்நேரமும் கண்காணிப்பது அவசியமாகும்" என்று அவர் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அந்தோணி, ராணுவப் படைகளைப் பெரிய அளவில் நவீனப்படுத்த வேண்டியதும் அவசியம் என்று கூறினார். அதே நேரத்தில், விரைவில் கருவிகளை வாங்கும் அவசரத்தில், வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார். மும்பை தீவிரவாதத் தாக்குதலை குறிப்பிட்ட அமைச்சர், கடலோர பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வடகிழக்குப் பகுதியிலும், எல்லையோரப் பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மிக முக்கியம் என்று தெரிவித்த அந்தோணி, தொலைதூர கடினப் பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் நலனில் கவனம் செலுத்துவதும் அவசியம் என்று குறிப்பிட்டார். வெறும் கருவிகளும், பயிற்சிகளும் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்தாது என்று அவர் தெரிவித்தார். அவர்களுக்கான தங்குமிடம், ரேஷன், உணவு மற்றும் உடை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் மேம்படுத்த தான் தனிப்பட்ட முறையில் ஆர்வமுடன் இருப்பதாக அவர் கூறினார்.
(டிஎன்எஸ்)
May 25, 2009
* Do not use semicolon(;)