புது தில்லி, மே 22 (டிஎன்எஸ்)
மத்திய அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தில் பரூக் அப்துல்லா சேர்த்துக்கொள்ளப்படுவார் எனப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, மே 22 அன்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமைச்சரவையில் தேசிய மாநாட்டுக் கட்சி இடம் பெறுகிறதா, இல்லையா என்பதைக் காங்கிரஸ் தெரிவிக்கவில்லை எனத் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மனக் குறை இருந்தது. இதையடுத்து மே 21 அன்று இரவு பிரதமர் மன்மோகன் சிங், ஒமர் அப்துல்லாவிடம் தொலைபேசியில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
அரசு அமைப்பதில் காங்கிரசின் அணுகுமுறை உங்களுளைக் கோப்படுத்தியதா எனக் கேட்டதற்கு, நாங்கள் கோபப்படுவதற்குப் பிரதமர் எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை என்றார்.
தேசிய மாநாட்டுக் கட்சி எந்தப் பதவியையும் வலியுறுத்தவில்லை; ஆனால், ஆனால், நாங்கள் அமைச்சரவைக்கு உள்ளா, வெளியிலா என்பதைக் காங்கிரஸ் தெரிவித்தால் நல்லது என அக்கட்சித் தலைவர் ஒமர் மே 21 அன்று தெரிவித்தார்.
இதற்கிடையே பரூக் அப்துல்லா, மன்மோகன் சிங்கின் பிரதமர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார். அவர், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் கடைசி ஆட்டங்களைக் காண, இந்தியக் கிரிக்கெட் வாரியக் குழுவுடன் இணைந்து அங்கு செல்கிறார்.
(டிஎன்எஸ்)
May 22, 2009
* Do not use semicolon(;)