புது தில்லி, மே 25 (டிஎன்எஸ்)
சரத் பவார், மே 25 அன்று வேளாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். அவர், வேளாண்மை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் ஆகிய துறைகளைக் கவனிக்கிறார். இவர், கடந்த முறை வகித்த அதே துறைகளை இந்த முறையும் பெற்றுள்ளார்.
வேளாண்மையின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்க, பவார் மூத்த அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டினார். அதிகரித்து வரும் கடன் சுமையால் அவதியுறும் விவசாயிகள் குறித்தும் அவர் ஆலோசித்தார்.
2008-09இல் இந்தியா, 99 மில்லியன் டன் அரிசியை விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோதுமையின் விளைச்சல், 77.63 டன்களாக இருக்கும். இது கடந்த ஆண்டின் கோதுமை உற்பத்தி அளவான 78.57 டன்களை விடச் சற்றே குறைவு.
கோதுமை மற்றும் பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதன் மீதுள்ள தடையை நீக்குவது, இரண்டாம் முறையாக அமைச்சர் ஆகியிருக்கும் சரத் பவாரின் முதல் நிர்வாக ரீதியிலான முடிவாக இருக்கும்.
(டிஎன்எஸ்)
May 25, 2009
* Do not use semicolon(;)