புது தில்லி, மே 25 (டிஎன்எஸ்)
இந்தியாவின் உள்துறை அமைச்சராக பழனியப்பன் சிதம்பரம் (ப.சிதம்பரம்) மே 25 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மே 22 அன்று மன்மோகன் சிங் தலைமையில் 19 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து ஆறு அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் மே 25 அன்று உள்துறை அமைச்சராகப் ப.சிதம்பரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
64 வயதான இவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர்; வழக்கறிஞர்; நிதியமைச்சராக இருந்து, உள்துறை அமைச்சர் பொறுப்பு மாறியவர்.
புலனாய்வு வலைப்பின்னலை மறு சீரமைப்பதிலும் தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களை இறுக்குவதிலும் சிதம்பரம் கவனம் செலுத்த இருக்கிறார்.
(டிஎன்எஸ்)
May 25, 2009
* Do not use semicolon(;)