உயர்நீதிமன்றத்தில் தேமுதிக வழக்கு

சென்னை, மே 27 (டிஎன்எஸ்)

தமிழ்நாட்டில் இனி நடக்க இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள முறையான வாக்குச் சீட்டு முறையில் இடைத்தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் எதிர்காலத்திலும் மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நலன் மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 13ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிட்டது. எந்தக் கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் முழுக்க, முழுக்க மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்களில் முறைகேடுகளும் குழறுபடிகளும் வாக்குப் பதிவின்போது நடைபெற்றன.

மத்திய சென்னை தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளரின் சின்னத்துக்கு பட்டனை அழுத்தினால், அது ஆளும் கட்சி வேட்பாளருக்குச் சாதகமாக ஓட்டு விழுந்தது. விருதுநகர் தொகுதியில் பதிவான ஓட்டுகளைவிட, கூடுதலாக 26 ஆயிரம் ஓட்டுகள் முறைகேடாகப் பதிவாகியுள்ளன. திண்டுக்கல் தொகுதியில் தே.மு.தி.க. சின்னத்தின் பட்டனை அழுத்தினால், காங்கிரஸ் வேட்பாளரின் சின்னத்தில் விளக்கு எரிந்தது.

வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தால் அது முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை. இதுகுறித்து எங்களது கட்சியினர் புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல இடங்களில் 5 ஓட்டுகள் பதிவானால், அதில் ஒரு ஓட்டு ஆளுங்கட்சிக்கு தானாகவே பதிவானது. இதுபோன்று தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தால் முறைகேடுகள் நடந்துள்ளன.

இந்த இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் முழுப் பயிற்சி அளிக்கவில்லை. ஆகவே, தமிழ்நாட்டில் இனி நடக்க இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்.

ஏற்கெனவே உள்ள முறையான வாக்குச் சீட்டு முறையில் இடைத்தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும் எதிர்காலத்திலும் மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு தேமுதிக கோரியிருந்தது.

இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் தனபாலன், சுந்தரேஷ் ஆகியோர் இதுகுறித்து 3 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசு, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அறிவிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

(டிஎன்எஸ்)

May 27, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தமிழகம் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
Party Positions - TN

Results Declared : 40

Party Won
DMK +  0  28
AIADMK+  0  12
DMDK  0  0
BJP+  0  0
Others  0  0

Click here for individual party positions

Worth a Click

Daily Predictions

MEENA MEENA : Want to have peace in domestic front? Then remember the simple rule, that c...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

All India Party Positions

Results Declared : 543

Party Won
UPA  0  262
NDA  0  160
Third Front  0  79
Fourth Front  0  28
Others  0  14

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

சொன்னார்கள்

"இந்தத் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகின்றன. அதற்கு நன்றி. மக்கள் எப்போதும் சரியான முடிவையே எடுப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை."

- சோனியா காந்தி.
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.