
புது தில்லி, மே 22 (டிஎன்எஸ்)
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மே 22 அன்று மாலை 6.30 மணி அளவில் 15ஆவது மக்களவையின் புதிய பிரதமராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 19 கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், பிரதமருக்கும் இதர அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஆளும் கூட்டணியில் உள்ள தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளுடன் துறைகளைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதால் முதல் கட்டமாக, பிரதமர் மன்மோகன் உட்பட 20 பேர் மட்டுமே மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். மே 26 அன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 19 கேபினட் அமைச்சர்கள் விவரம் வருமாறு:
1. பிரணாப் முகர்ஜி
2. சரத்பவார்
3. ஏ. கே. அந்தோணி
4. ப சிதம்பரம்
5. மம்தா பானர்ஜி
6. எஸ் எம் கிருஷ்ணா
7. குலாம் நபி ஆசாத்
8. சுஷில் குமார் ஷிண்டே
9. எம். வீரப்ப மொய்லி
10. எஸ் ஜெய்ப்பால் ரெட்டி
11. கமல்நாத்
12. வயலார் ரவி
13. மீரா குமார்
14. முரளி தியோரா
15. கபில் சிபல்
16. அம்பிகா சோனி
17. பி. கே. ஹண்டிக்
18. ஆனந்த் சர்மா
19. சி. பி. ஜோஷி
பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
(டிஎன்எஸ்)
May 22, 2009
* Do not use semicolon(;)