|
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பொ.மோகன் எம்.பி.யை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது, இந்து நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ராம் உடன் வந்து நலம் விசாரித்தார். மோகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து, மருத்துவர் நீலமேகம், பிரகாஷ் காரத்திடம் விளக்கினார். இந்தச் சந்திப்பின் போது டி.கே.ரங்கராஜன் எம்.பி. உடன் இருந்தார்.
Pages : 1
|