தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கம், தேர்தலில் போட்டியிடும் அனைத்து
வேட்பாளர்களின் சொத்து, கடன், குற்றப் பின்னணி ஆகியவற்றை அவர்கள் சம்ர்ப்பித்த
மனுக்களிலிருந்து தொகுத்து, பத்திரிகைகள் மூலமாக ஒவ்வொரு கட்டத் தேர்தலின்
போதும் முதல் நாள் வெளியிட்டு வருகிறார்கள்.
அதன்படி, தமிழக வேட்பாளர்களைப்
பற்றிய விவரங்களையும் மே 11 அன்று பத்திரிகையாளர்கள் முன் வெளியிட்டார்கள்.
இந்தத் தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தில் பேராசிரியர்கள், தன்னார்வ தொண்டு
நிறுவனத்தினர், ஒய்வு பெற்ற ஐ.ஏ.ஸ் அதிகாரிகள், நீதிபதிகள் எனப் பலர்
இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பல இடங்களிலிருந்தும் பலர், முக்கியமாக
மாணவர்கள், இண்டர்நெட் மூலமாக இந்த விவரங்களைத் தொகுத்தனர். வேட்பாளர்கள்
மனுக்களைத் தாக்கல் செய்தபின், அந்த மனுக்களை 'ஸ்கேன்' செய்து சென்னையிலுள்ள
தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பர். தலைமைத் தேர்தல் அதிகாரி, அந்த
விவரங்களை, jpeg ஃபைலாக அவர்களது இணைய தளத்தில் வெளியிடுவர். தமிழகத்தில் 877
வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் பல கோப்புகளைத் தரவிறக்கம் செய்ய
முடியவில்லை என்று, தேசிய தேர்தல் கண்காணிப்பு நிர்வாகிகள் குற்றம்
சாற்றினார்கள். தேர்தல் ஆணையம், இந்த விவரங்களைச் சரியாகவும் உடனடியாகவும்
தங்கள் இணைய தளத்திலும் வெளியிடவில்லை. இந்தக் கணினி யுகத்தில், இது போன்று,
காலம் தாழ்த்தியும், தரவிறக்கம் செய்ய முடியாமலும் வெளியிட்டால், மக்கள்
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்க வாய்ப்பு உள்ளது.
அடுத்து
வரும் சட்டசபை, மற்றும் மக்களவைத் தேர்தலிலாவது, கணினி மூலம் இந்த விவரங்களை
அளிக்கலாம். லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு விண்ணப்பங்களையே சமாளிக்கும்
அரசாங்கம், இந்த விண்ணப்பங்களை மனம் இருந்தால், சரியாக வழங்க முடியும். அகில
இந்திய அளவில், அனைத்து வேட்பாளர்களின் விவரங்களையும்
http://www.myneta.info என்கிற் இணைய
தளத்தில், தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கம் வெளியிடுகிறது. இது சம்பந்தமாக,
தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தின் தமிழக நிர்வாகிகளை, பத்திரிகையாளர்
சந்திப்பின் போது 'பிரைம் பாய்ன்ட்' சீனிவாசன் பேட்டி கண்டார். இவர், 'வெற்றிப்
படிகள்' என்ற வலைப்பதிவை நடத்தி வருகிறார். இந்தப் பேட்டியின் ஒலி வடிவினை
இங்கே கேளுங்கள்.