தமிழ்நாட்டின்
சிறிய கிராமத்தில் பிறந்த என்.கோபாலசுவாமி, 1966இல் இந்திய ஆட்சிப் பணி
அதிகாரியாகத் தேர்வு பெற்றார். பல்வேறு பணிகளுக்குப் பிறகு, இந்திய தேர்தல்
ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்; தம் பணியின் இறுதிக்
காலத்தில், தன் சக அதிகரி நவீன் சாவ்லா மீதான அலுவல் ரீதியான பரிந்துரைகளால்
பரபரப்பை ஏற்படுத்தினார்; 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உயர்நிலை நிர்வாகத்தில்
முக்கிய பங்காற்றியுள்ளார்.
இவரை 'வெற்றிப் படிகள்' என்ற வலைப் பதிவை நடத்தி வரும் 'பிரைம் பாய்ன்ட்'
சீனிவாசன், 28.04.2009 அன்று தொலைபேசி மூலமாகப் பேட்டி எடுத்தார். ஆங்கிலத்தில்
அமைந்த இந்தப் பேட்டியில் கோபாலசுவாமியின் தாத்தா கூறிய 'நேர்மையாக இரு' என்ற
அறிவுரை, தமிழிலேயே இடம் பெற்றுள்ளது. 18 நிமிடங்கள் நீளும் இந்தப் பேட்டியின்
ஒலி வடிவினை இங்கே கேளுங்கள்.