தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
C-Digest
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Personality
 in
   
 
 
 
 
 
இந்த வார பிரபலம்.....4
video

Part I  Part II  Part III

Sivakumarராம: நாடகங்கள்...... கிட்டத்தட்ட தினமுமே நாடகங்கள்... சில நாட்கள் இரண்டு மூன்று நாடகங்கள் என்றிருந்த ஒரு காலகட்டம்..... காலைல ஆறு மணிக்கு சினிமா ஷுட்டிங் போயிட்டு, மாலைல ஆறு மணிக்கு வீடு திரும்பி மீண்டும் நாடகம்... என்றிருந்த ஒரு காலகட்டம். பிறகு நாடகத்தை நிப்பாட்டிட்டீங்க. இப்ப ஒருசில ஆண்டுகளாக திரைப்படங்களிலும் நடிக்கிறீர்கள் என்று முடிவு பண்ணியிருக்கிறீர்கள். நாடகத்துல நடிக்க அழைச்சா வருவீங்களா...?!

சிவ: சார் நாடகத்துல நடிப்பது என்றால் பெரிய கஷ்டமே இல்ல. ஏன்னா எனக்கு இன்னும் மனப்பாடம் பண்ற ஆற்றல் இருக்கற. நாடகம்...... மொத்தத்துல அந்த கான்சப்டே மாறணும் சார். நடுத்தர குடும்பம். நிறைய வசனங்கள் பேசறது. இதெல்லாம் மாறணும் சார். நாடகம் வந்து புராண நாடகங்கள்தான் முதன்முதல்ல போட்டாங்க. ஏன் என்றால் அந்த கதைகள்தான் எல்லோருக்கும் பழக்கப்பட்டிருந்தது.

இப்ப சராசரி மனிதன் வந்து ராஜா கதைன்னா அவன் நகை-நட்டு போட்டு கிரீடம் வச்சி வந்தா பார்க்க அழகா இருப்பாங்க. அது மக்களுக்கு பிடிச்சிருந்தது. அதற்கு பிறகு காலங்கள் மாறிய பின் 1940-களிலேயே அமைச்சூர் தியேட்டர் என்பது வந்து, சமூகக் கதைகள் வச்சு நாடகங்கள் போட ஆரம்பிச்சாங்க. அப்போ சினிமா வந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தல. நாங்க எல்லாம் நாடகங்களில் இருந்தபோது, சென்னையில 120 சபா இருந்தது. ஒவ்வொரு சபாவில ஒருநாள் நாடகம் போட்டா... தொடர்ந்து 120 நாள் நாடகம் நடத்தலாம். டிவி வர்றதுக்கு முன்னாடி... அப்போது பொழுதுபோக்கு வேறெதும் இல்லங்கறதால மக்கள் ஆபிசிலிருந்து வந்தவுடன், முகத்தை கழுவிகிட்டு பவுடர் அடிச்சிகிட்டு நேரா ஸ்கூட்டரோ, பஸ்ஸோ பிடிச்சி தியேட்டர் தியேட்டரா ஆடிட்டோ ரியத்தை ரொப்பிட்டிருந்தாங்க. அப்புறம் சின்னத்திரை என்று ஒன்று வந்து எல்லாத்தையும் கவுத்துச்சு.

நாடக ஆர்வலர்களுக்கு 75 வயசு, 80 வயசாகிப் போச்சு. சின்னப்பசங்க மானாட..மயிலாட பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அப்புறம் வந்து 1917-ல ஊமைப்படம். 1931 அக்டோ பர் மாதத்தில் டாக்கீஸ். பல தொலைக்காட்சி சானல்கள் இதையெல்லாம் வாங்கி வச்சிக்கிட்டு நானே பார்த்திராத பல படங்கள அடிக்கடி டிவி-ல போடுறாங்க.

இந்த டிபிராபிக்ல போராடி அங்க போனோம்னா நாடகம் ஸ்லோவா இருக்கு. புதுசா எதுவும் செய்யறது ஏதுமில்லை.

சதுரங்கம், மேஜர் சந்திரகாந்த், மெழுகுவர்த்தி, நீர்க்குமிழி-ன்னு பார்த்தீங்கன்னா சினிமா மாதிரி பண்ணுவார் பாலசந்தர். ஒரே ஒரு அரங்கம் போட்டு, சினிமா தியேட்டர்ல உட்காரந்துக்கிட்டிருக்கிற மாதிரி அப்படி மாடர்னா அவர் பண்ணாரு.

கோமல் சாமிநாதன் சமூக பிரச்சினைகளை வச்சிகிட்டும், மனோகர் வந்து நவாப் ராஜமாணிக்கத்தின் ஆட்களை வைத்துக் கொண்டு அவர் மாஜிக் பண்ற மாதிரி நாடகம் பண்ணினாரு.

இதனால இதையெல்லாம் தாண்டிப்போற மாதிரி கதைகள்ல ஏதாவது புரட்சி பண்ணி..... தியேட்டர்ரோட கேரக்டரையே மாத்தி பக்கம் பக்கமா டயலாக் பேசறத மாத்தி ஏதானும் பண்ணினாத்தான் உண்டு. அப்படி நடந்ததுன்னா..... எனக்கு கஷ்டமே இல்ல. கண்டிப்பா நான் என்னை இணைச்சிக்கிறேன்.

Sivakumarராம: உங்கள் மண வாழ்க்கையை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

சிவ: மணவாழ்க்கைங்கறது சார். வந்து சார் நான் கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுன்னு .இருந்தன் சார். எனக்கு கல்யாணத்து மேல விருப்பம் இல்லங்கறத விட, நாட்டுல நூறு கோடி பேர் இருக்காங்க. நாம வேற புற்றீசல் மாதிரி குழந்தை குட்டி பெத்துக்க வேண்டாம் அப்படீன்கற மாதிரி இருந்தேன் நான். நான் ஓவியத் துறையை வரித்துக் கொண்டதனால், பொருளாதார ரீதியில வெற்றிகரமான ஓவியனா வரமுடியும்னு நினைக்கல. அதனால அப்படி இருக்கும் போது தாடியெல்லாம் வச்சிகிட்டு பரதேசி மாதிரி சுத்திக்கிட்டிருப்பேன் அப்படீங்கற எண்ணத்துலதான் இருந்தேன். அதனால அப்ப கல்யாணம் முடிக்கணும்ங்கற எண்ணம் இல்ல.

பாதை மாறி நடிக்க ஆரம்பிச்சி ரெண்டு வருஷம் ஆனபோது இது வந்து ஒரு மனிதச் சங்கிலி. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டீன்னு வாழ்ந்து வந்த சங்கிலித் தொடரை நாம ஏன் கட் பண்ணணும்..? அப்படீனுட்டு, கல்யாணம் பண்ணிக்கலாம் என்று முடிவு பண்ணினேன். ஆனால் காதல்-கீதல் எல்லாம் கிடையாது. ஆனா வழக்கம்போல நடிகனுக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க. இப்ப நானே குடுக்க மாட்டேன்ல. ஏன்னா பாதுகாப்பான் வாழ்க்கை இல்ல.

நான் நல்லவனா இல்லையா என்பது எனக்குத் தெரியும். ஆனா நூறுல 99 பேருடைய வாழ்க்கை நமக்கு தெரியும்ங்கறதால நடிகருக்கு வந்து பொண்ணு கொடுக்கறதுக்கு பயப்பட்டாங்க. 3, 4 பேர்கிட்ட போய் கேட்டோம். எல்லோருமே பல்வேறு காரணங்களை சொல்லி தட்டிக் கழிச்சாங்க. கடைசில ஒரு அம்மா வந்து நம்மகிட்ட மாட்டிக்கிட்டாங்க. ரொம்ப பரிதாபத்திற்குரிய பெண்மணி.

3 குழந்தையும் பெத்துக்கிட்டாங்க. நான் பண்ணின கொடுமையே என்னன்னா காலைல ஆறு மணிக்கு புற்பபட்டு போவேன். உங்கள மாதிரி ஆபீஸ் டைம் எல்லாம் கிடையாது எனக்கு. ஒவ்வொரு நாளைக்கு ஒரு மாதிரி ஒரு செட் இருக்கும். இன்னிக்கு ஒரு புராண செட். நாளைக்கு போன ஒரு குடிசை இருக்கும். நாளன்னிக்கு அவுட்டோ ரா இருக்கும். இடங்கள் மாறுது. டைரக்டர் மாறும், வசனங்கள் மாறும். கூட நடிக்கிற நடிகைகள் மாறுவாங்க. டெக்னீஷியன் மாறுவாங்க. ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் பையன் போல ஒரு டென்சன்லயே தொழில் பண்ணவேண்டியிருக்கும்.

சாயந்திரம் ஆறேமுக்கால் ஆனால், சிவகுமார் வரானோ இல்லலையோ, டான்னு முதல் மணி அடிப்பாங்க. 6.55-க்கு இரணடாவது மணி. 7 மணிக்கு, யார் வந்தார்களோ, வரலையோ நாடகத்தை ஆரம்பிச்சிடுவாங்க. இதுக்காக தலை தெறிக்க போகணும்.

இப்படி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் போர்க்களத்திற்கு போகிற மாதிரி காலைல ஆறு மணிக்கு போய், மாலைல நாடகத்துல நடிச்சிகிட்டு - 250 பக்க டயலாக் நாடகங்கள்ல - தியேட்டர்ல பிராம்டிங்கெல்லாம் பண்ண முடியாது. கண்ணுல ரத்தம் வர்ற மாதிரி கிளிசரின் எல்லாம் போட்டுகிட்டு, ராத்திரி வந்து படுப்பேன். மறுபடியும் காலைல ஆறு மணிக்கு எழுந்து ஷுட்டிங். என் மனைவிகிட்ட நான் பேசறதே இல்லை. திடீர்னு ஒரு நாள் அடே டே! இன்னிக்கு இந்த அம்மாவுடைய பிறந்த நாளேச்சேன்னு கண்டுபிடிச்சி, புடவைக் கடைக்கு போய் புடவை வாங்கி ஜாக்கெட் தைக்கக் குடுத்து அந்த அம்மாகிட்ட புடவையை கொடுத்தேன். என்ன விஷயம்னாங்க.

இன்னிக்கு உன் பிறந்தநாள்.

அப்படியா!.-ன்னாங்க.

திடீர்னு பாசமெல்லாம் காட்டாதீங்க. ஏதாவது தப்பு தண்டா பண்றீங்களா சொல்லுங்க..? எப்பவுமே சிடுமூஞ்சியா இருப்பீங்க. திடீர்னு பாசம் காட்றீங்க. ஒரே குழப்பமா இருக்கேன்னாங்க. ஒரே ஒரு வார்த்தை சொன்னாங்க. ஏன்யா 14 வருஷமாச்சு 3 குழந்தைய பெத்திருக்கேன். என்னைக்காவது கழுத்துல என்ன செயின் போட்டிருக்கேன். சமைத்து போட்ட சாப்பாடு நல்ல இருக்கா - இல்லையா நீ தப்பித் தவறி கேட்டிருக்கியா. கேக்கல. உனக்கெல்லாம் எதுக்கு கல்யானம்? 32 வருஷம் கல்யாணம் பண்ணிக்காம இருந்தியே அப்படியே ஓட்டிட்டு போயிருக்கலாம்ல அப்படீன்னாங்க.

நியாயமா தோணிச்சு. அப்படியே செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி கேட்டாங்க. நாளைக்கு சாப்பிடற வாழைப்பழத்தையே சந்தையில் வாங்கும்போது, நாலு வாட்டி அமுக்கி பார்த்து வாங்கிட்டு வர்றீயே! வாழ்நாள் பூரா உன்கூட வாழற பொண்டாட்டிய உங்க நண்பனைவிட்டு பார்த்தவன் தானயா நீ. நான் ஒரு ஆடு-மாடுதான்யா உனக்கு. நான் ஒரு பொம்பளையான்னு கேட்டாயா.

இன்னிக்கு வரைக்கும் என்கிட்ட அதுக்கு பதில் கிடையாதுய்யா. நான் என்ன நினைச்சேன்னா...மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம்னு நம்பறவன் நான். நான் போகாமல் ஏன் நண்பனை அனுப்பிச்சேன்னா.... 13 பொண்ணு பார்த்தேங்க. 13-ம் செட் ஆகல. இப்ப ஒரு பொண்ணை நான் பார்க்கறேன். ஏதாவது ஒரு காரணத்திற்காக கல்யாணம் நடக்காமல் போகுது. அப்படி அந்த பொண்ணு மனசுல ஒரு கஷ்டம் வரக்கூடாதுங்கறதுக்காக நண்பனை அனுப்பிச்சேன். இந்த அம்மா என்ன சொல்றாங்க? நீ ஆடு-மாட விலைக்கு வாங்கற மாதிரின்னு சொல்றாங்க. இப்படி ஒரு துன்பத்துலதான்யா வாழ்க்கை ஓடிட்டிருக்கு.

ராம: திடீர்னு 14 வருஷத்துக்கு பிறகு இப்படி வாங்கிக் கொடுக்கக்கூடாதுன்னு.. சிவாஜி உங்களுக்கு அறிவுரை சொன்னாரு இல்லையா..?!

சிவ: சிவாஜி முதல்ல என்ன பண்ணினாரு. அவங்க அம்மா படத்தை நான் வரைஞ்சு கொடுத்தேன். நம்ம திறமை நமக்கு தெரயும் இல்லையா..? அவரு அவங்க அம்மா படத்தை பார்த்துட்டு.. ஏலேய், கைல தொழிலு இருக்குடா. நீ பொழச்சுக்குவடான்னாரு. சரின்னேன். நான் வேற என்ன சொல்ல முடியும்.

புதுக்கோட்டை ராஜா வகையில ஒரு பொண்ணு இருக்குது கட்டிக்கிறயான்னாரு. நான் சைலண்ட்டா இருந்தேன். சொல்லுடா... என்ன? அப்படீன்னாரு. நான் பேசாம இருந்தேன். வேணும்-வேண்டாம்னு சொல்லுடான்னாரு. "அரண்மனையில ஏற்கனவே இருக்கிற டவாலிகள் போறாதா? இன்னொரு டவாலி வேணுமா" அப்படீன்னு கேட்டேன். திமுரு ஜாஸ்திடா உனக்கு அப்படீன்னாரு. எனக்கு சாதாரண குடும்பத்துலருந்து ஒரு ஆள் போதுங்க. என் பேரைச் சொல்ற மாதிரி ஒரு மாமனார் இருந்தா போதுங்க. புதுக்கோட்டை ராஜாவெல்லாம் வேண்டாங்க அப்படீன்னேன்.

அவரு எப்படீன்னா 24 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. "ஏலேய்! ரொம்ப லேட்டா கல்யாணம் பண்ணினேன்னா... யாரு தேவையும் இல்ல -ன்னு பொஞ்சாதி உனக்கு துச்சமா தெரிவாடா. ஏன்னா 30 வயசு வரைக்கும் நாம தனியாவே வாழ்ந்துட்டோ ம். மிச்ச வாழ்க்கை தனியா வாழ முடியாதா? என்ன இவங்க பெருசா வந்து என்ன பண்ணப்போறாங்க...?! அப்படீன்னு பொஞ்சாதி மேல பற்றே இல்லாம போயிடும்டா. அதுக்காகத்தான் முன்னாடியே பண்ணிக்கச் சொல்றேன்னாரு.

அவரை நான் பெரிய சிந்தனைவாதி அப்படீன்னு எல்லாம் ஏத்துக்க மாட்டேன். ஆனா இந்த விஷயத்துல என்ன உண்மைன்னா..! 32 வயசுல நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதால பொண்டாட்டி மீது அன்பு இருக்கு. பாசம் இருக்கு. ஆனா அவங்கள்லாம் இல்லாமலே நாம வாழ முடியும்கற ஒரு எண்ணம் ஏற்பட வாய்ப்பிருக்கு. இளம் வயதிலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டோ ம்னா.. அந்த அன்பு, பாசம் எல்லாம் கொஞ்சம் அதிகமா வர்றதுக்கான வாய்ப்பு இருக்கு.

(உங்களை மிகவும் துக்கப்படுத்திய சம்பவம், மிகவும் மகிழவைத்தச் சம்பவம், வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள், இளமையின் ரகசியம், தமிழ் இலக்கிய ஈடுபாடு, மிகவும் கவர்ந்த எழுத்தாளர், வைரமுத்துவின் வரிகளில் மிகவும் ஈர்த்தவை, திருக்கழுக்குன்றம்வரை சைக்கிள் பயண அனுபவம், குதிரை சவாரி அனுபவம், குறைந்தது 150 பெண்களுக்கு தாலி கட்டிய அனுபவம்... இப்படி பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அடுத்த பகுதியில்)

Part I  Part II  Part III

V i d e o s

More Interviews August 30th, 2008

Previous:    Interview of the week: DR. V MOHAN


More Interviews
Shopping Chennaionline
Crackers
Diwali Special - Diamond Crackers
INR 1277.00/USD 30.40
Crackers
Diwali Special - Jubilee Crackers
INR 1100.00/USD 26.19
Crackers
Diwali Special - Marvel Crackers
INR 1764.00/USD 42.00
Combo Sweets
Diwali Sweets - Dry Fruit Laddoo
INR 599.00 / USD 14.26
Combo Sweets
Diwali Sweets - Kaju Kamal
INR 825.00/USD 19.64
Sarees
Kanchi Silk Sarees - Nishanthi
INR 1300.00/USD 30.95
Sarees
Kanchi Silk Sarees - Subhashini
INR 1100.00/USD 28.21
Sarees
Kanchi Silk Sarees - Kanchana
INR 1300.00/USD 30.95
Ghee Sweets
Ghee Sweets - Ravaladu
INR 294.00/USD 7.00
Ghee Sweets
Ghee Sweets - Sonpapadi Cake
INR 370.00/USD 8.81
Ghee Sweets
Ghee Sweets - Laddu
INR 411.00/USD 9.79
Dhotis
Cotton Dhothi with Thread Mayi
INR 950.00/USD 22.62
Dhotis
Cotton Mayilkan White
INR 2200.00/USD 52.38

Online Homeopathy Consulting!
BSE/NSE Live
Horoscope with 10 Year's Prediction
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera