பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் இருந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 7ஆம் தேதியில் இருந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. அத்துடன் எல்லையில் உள்ள இந்திய பகுதிகள் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தியதனால் தான் நாங்களும் தாக்குதல் நடத்துகிறோம் என பாகிஸ்தான் சொல்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறோம் என இந்தியா கூறி வருகிறது. இதனால் பதற்றம் தணியவில்லை. இதற்கு இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க வெளியறவுத்துறை மார்கோ ரூபியோ இரு தரப்பிலும் பேசி வருகிறார்.
Read More