Tamil

Tamilசெய்திகள்

புறநகர் ஏசி மின்சார ரெயில்களின் கட்டணம் குறைக்கப்படாது – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார

Read More
Tamilசெய்திகள்

பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சட்டசபையில் 110 விதிகளின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: * மொழி, உணர்ச்சி, மொழி, மானம், மொழி பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம் பாவேந்தர் பாரதிதாசன். * பாரதிதாசன் எழுத்துகளை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை. * பல இளம் கவிஞர்களை உருவாக்கியவர் பாவேந்தர் பாரதிதாசன். * பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.25 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும். * தமிழர் உணர்விலும் குருதியிலும் கலந்த புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை ஒட்டி தமிழ் வார விழா கொண்டாடப்படும். * கவிஞர் பாரதிதாசனை போற்றும் வகையிலான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். * பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும். * அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெறும்.

Read More
Tamilசெய்திகள்

திருப்பதி கோவிலுக்கு காரில் வரும் பக்தர்களை எச்சரித்த காவல்துறை!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க சொந்த வாகனங்களில் வருபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷவார்த்தன் ராஜு எச்சரிக்கை விடுத்து உள்ளார். கோடை வெப்பம் காரணமாக சமீபத்தில் திருப்பதி மலை பாதையில் வந்த 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து நிபுணர்கள் அளித்த அறிக்கை படி, பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 500 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிகம் வெப்பம் அடைகிறது. மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் காரை நிறுத்தி அணைத்து வைக்க வேண்டும். எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது ஏசியை பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். நியூட்ரலில் வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

Read More
Tamilசெய்திகள்

எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் பா.ஜ.க. மாநில தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இவர்களது சந்திப்பானது எதிர்க்கட்சி தலைவர் அறையில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின்பு எடப்பாடி பழனிசாமி- நயினார் நாகேந்திரன் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
Tamilசெய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!

உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை

Read More
Tamilசெய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் வழக்கு – இரண்டு பேருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கு மேற்பட்டோர் பலியாகினர். கடந்தாண்டு ஜூன் 19-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டவர்கள்

Read More
Tamilசெய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

Read More
Tamilசெய்திகள்

உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்யா அறிவிப்பு

2022 இல் தொடங்கிய உக்ரைன்- ரஷியா போர் 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயும் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷிய அதிபர் புதின் முதல்முறையாக அறிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி 30 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. நேற்று இந்த போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க உக்ரைன் அழைப்பு விடுத்தது. குறைந்தபட்சம் பொதுமக்கள் வசிக்கும் இலக்குகளைத் தாக்கக்கூடாது என்ற தனது திட்டத்தை உக்ரைன் தொடர்கிறது. மேலும் மாஸ்கோவிடமிருந்து தெளிவான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருந்தார். இந்நிலையில் ரஷிய அரசுத் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் புதின், போர் நிறுத்தம் குறித்து எங்களுக்கு நேர்மறையான அணுகுமுறை உள்ளது. எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் நாங்கள் திறந்திருக்கிறோம், உக்ரைனும் அதற்கு விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று பேசியுள்ளார். இதற்கிடையே அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த வாரம் லண்டனில் சந்திக்க உள்ளனர்.

Read More
Tamilசெய்திகள்

அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிரணி போராட்டம்!

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதற்கிடையில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க. மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. மகளிரணி கண்டன போராட்டத்தில் நடிகை கவுதமி பங்கேற்றார். போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.

Read More
Tamilசெய்திகள்

சென்னைய்ஹில் புறந்கர் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஆவடியில் இருந்து வந்த புறநகர் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை ராயபுரம் – கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் 3-வது பெட்டியில் 2 ஜோடி சக்கரங்கள் தடம் புரண்டது. சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. மிதமான வேகத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

Read More