.

80 வயது மூதாட்டி வேடத்தில் நடிக்கும் சமந்தா!

August 10, 2018, Chennai

Ads after article title

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்ட சமந்தா விரைவில் அம்மாவாகிவிடுவார் என்று எதிர்ப்பார்த்தால், தற்போது அவர் பாட்டியாகும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் சமந்தாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் கையில் இருக்கிறது.

இந்த நிலையில், கொரியன் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் சமந்தா, அதில் 80 வயது மூதாட்டி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.