600 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது விப்ரோ

April 21, 2017, Chennai

Ads after article title

பெங்களூர், ஏப்.21 (டி.என்.எஸ்) பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியாவின் 3 வது பெரிய நிறுவனமான விப்ரோ, 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.


இது தொடர்பாக விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடுமையான செயலாக்க மதிப்பீட்டு முறையான, அறிவுரை அளித்தல், மறு பயிற்சி மற்றும் பணியாளர்கள் திறனை உயர்த்துதல் போன்றவற்றை சீரான முறையில் விப்ரோ நிறுவனம் மேற்கொள்கிறது. அதன்படி வர்த்தக நோக்கங்கள், வாடிக்கையாளர்கள் தேவைகள் மற்றும் நிறுவனத்தின் அதிமுக்கியத்துவம் ஆகியவற்றுடன் பணியாளர்களை வரைமுறைப்படுத்தி கொள்கிறது. இதன் காரணமாக பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை வேறுபடுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.