.

2019 ல் திருமணம் - மனம் திறந்த விஷால்

July 05, 2018, Chennai

Ads after article title

தென்னிந்திய நடிகர்கள் சங்க செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷால், 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்து வருகிறார்.


லிங்குசாமி இயக்கம் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்கிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் போட்டு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பின் நடுவே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த விஷாலிடம், திருமணம் குறித்து கேட்டதற்கு, 
நான் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும்போது சொன்னது தான். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிய பின்பு தான் எனது திருமணம். அதுபோல 2019-ம் ஆண்டு நடிகர் சங்க கட்டிடம் திறந்து முடித்தவுடன், எனது திருமணம் தமிழக மக்கள் ஆசியுடன் நடக்கும், என்று தெரிவித்துள்ளார்.