11 வது இடத்தில் இருந்து 7 வது இடத்திற்கு முன்னேறிய சர்க்கரை நோய்!

October 15, 2016, Chennai

Ads after article title

சென்னை, அக்.15 (டி.என்.எஸ்) கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.


மேலும், இந்த 11 ஆண்டிகளில் சர்க்கரை நோயால் இந்தியாவில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாம்.

அதாவது, மரபணுக் கோளாறுகள் மட்டுமின்றி வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் சர்க்கரை நோய் பலரை பாதித்து வருகிறது. போன 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக நபர்களை பலி வாங்கிய நோய்கள் பட்டியலில் சர்க்கரை நோய் 11-வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போதைய ஆய்வுப்படி 7 வது இடத்தில் உள்ளதாம்.

மேலும், கடந்த .2015-ஆம் ஆண்டு மட்டும்  3,46,000 பேர் சர்க்கரை நோயால் இந்தியாவில் இறந்துள்ளனர். இது இந்தியாவின் இறப்பு சதவிகிதத்தில் 3.3 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் இந்த கவுண்டிங் கடந்த 1990-ஆம் ஆண்டு 2.7 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது.

இந்த  ஆய்வின்படி பார்த்தால், இந்தியாவில் உள்ள ஒரு லட்சம் பேரில் 26 பேர் சர்க்கரை நோயால் உயிரிழக்கின்றனர் என்பதும், உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக சர்க்கரை நோய் நோயாளிகளை இந்தியா கொண்டிருக்கிறது என்பதும்  தெரியவந்துள்ளது.