“குரு பார்க்க கோடி நன்மை" குருவை வழிபட எளிமையான மந்திரம்

August 04, 2016, Chennai

Ads after article title

நவகிரகங்களிலேயே அதிக தீமை செய்யாத ஒரே கிரகம் குரு பகவான் தான். மற்ற கிரகங்களின் ஆதிக்கத்தால் பாதித்தவர்கள், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், ஏழரை சனியினால் அவதிபடுபவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் ஜாதகத்தில் குரு பலம் இருந்தால் மேற் கூறிய எதற்கும் இவர்கள் அஞ்ச தேவையில்லை.


ஏனெனில் அவர் முழு சுபகிரகமாவார்.

தனம், திருமண பாக்கியம், புத்திர சம்பத்து இவை மூன்றும் கிடைத்திட நிச்சயம் குரு பலம் வேண்டும். திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கும் போது குரு பலம் உள்ளதா என்று தான் முதலில் பார்ப்பார்கள். இதையும் தவிர அறிவு, கல்வி, அதிகார பதவிகள், நிதிதுறை, நீதிதுறை, வங்கி போன்ற துறைகளில் சிறந்து விளங்கிடவும் ஆண்மீக சொற்பொழிவு, கலை கலாட்சேபம் போன்றவற்றில் ஈடுபடவும்
குருவின் அருள் நிச்சயம் தேவை.

“குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்”. அவரின் பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. அவரை மனமார வழிபடுபவர்களுக்கு ஞானத்தை வாரி வழங்குவார். மாணவர்கள் கல்வியில் சிறந்திட அவரை வணங்க வேண்டியது அவசியம். குரு பகவான் என்றுமே நன்மை மட்டும் தான் செய்வார். அவர் பெயர்சி பெரும் போது சிலருக்கு நற்பலன்கள் குறையலாமே தவிற தீய பலன்கள்

குருவை வழிபட எளிமையான மந்திரம்

குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹா குரு சாட்சாத் பரப்ரம்ஹா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹா

குருபகவானுக்குறிய கிழமை வியாழன், பூஜைக்குறிய மலர் முல்லை, தானியம்- கொண்டைக்கடலை, வாகனம்- யானை, உலோகம்- தங்கம், நிறம்- மஞ்சள், நிவேதனம்- வெண் பொங்கல்.

 

 - கோதை